Director Rambala and GV Prakash’s next is produced by Steeves corner

Comedy and Entertainment are the two powerful genres that will be welcomed by all sets of Audience in all-time. When these two genres combine together, then definitely the expectations of the Audience will be at its peak. Get ready to experience such a kind of complete Comedy-Entertainment through the upcoming untitled film directed by ‘Dhilluku Dhuddu’ fame Rambala. Starring the most promising GV Prakash, this untitled project is produced by Stephen under the banner ‘Steeve’s Corner’.

“I am very much glad to join with a successful combo for this film…Right from the day one of ‘Lollu Sabha’, I am a huge fan of Director Ram Bala sir. Most of the times I laugh out laugh because of his spontaneous comedy and timing counter attacks… We can experience it in his latest blockbuster ‘Dhilluku Dhuddu’.
Likewise, GV Prakash has evolved as an Audience Choice actor through his new-age style of acting, and currently he is one of the promising heroes in Tamil film industry. It is my pleasure to produce this film with Dr.Laughter and Mr.Promising. We are commencing shoot from Mid-November. The search for the other cast and crew is on, and there will be a other big surprise in the casting which will add power to the genre” says Producer Stephen, the founder of ‘Steeve’s Corner’ Production House in a positive tone.
01-turing-phone-cadenza-announced
‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ தயாரிப்பில் உருவாகிறது இயக்குனர் ராம்பாலா மற்றும் ஜி வி பிரகாஷ் கூட்டணி அமைத்திருக்கும் புதிய திரைப்படம்
நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டு சிறப்பம்சங்களை கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.. தற்போது அந்த வரிசையில் இணைய தயாராக இருக்கிறது, ‘தில்லுக்கு துட்டு’ புகழ் ராம் பாலா இயக்க இருக்கும் திரைப்படம். ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜி வி பிரகாஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும்  இந்த  பெயரிடப்படாத  திரைப்படத்தை, ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார் ஸ்டீபன்.
“இந்த திரைப்படம் மூலம் ஒரு  வெற்றிகரமான கூட்டணியோடு இணைந்திருப்பது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. ‘லொல்லு சபா’ நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாட்களில் இருந்தே நான் இயக்குனர் ராம் பாலா சாரின் மிக பெரிய ரசிகன்…. அவருடைய டைமிங் காமெடியைம், கவுண்ட்டர் வசனங்களையும் பார்த்து நான் பல முறை வாய்விட்டு சிரித்ததுண்டு…. சமீபத்தில் வெளியாகி, சூப்பர் ஹிட் அடித்த அவருடைய ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம்….
அதேபோல்,  இன்றைய காலத்திற்கு ஏற்ற  புதுமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து இருப்பவர் ஜி வி பிரகாஷ்…. அதுமட்டுமின்றி தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய கதாநாயகன்களில் அவரும் ஒருவர் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். நகைச்சுவையின் பிறப்பிடமாக விளங்கும் ராம்பாலா சார் மற்றும்   ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய நாயகனாக திகழும் ஜி வி பிரகாஷ் ஆகிய இருவருடனும் கூட்டணி அமைத்திருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். எங்கள் படத்தின் படப்பிடிப்பை நாங்கள் நவம்பர் மாத இடையில் ஆரம்பிக்க இருக்கிறோம். தற்போது படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர் – நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது ..கதை களத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாகவும், ரசிகர்களின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வண்ணமாகவும் எங்கள் படத்தில் விரைவில் இணைய இருக்கிறார் பிரபலர் ஒருவர்….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ நிறுவனத்தின் உரிமையாளரும், இந்த படத்தின் தயாரிப்பாளருமான ஸ்டீபன்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும் “லைகா புரொடக்ஷன்ஸ் 9”

தூங்காநகரம், சிகரம் தொடு என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

தொடர் வெற்றி படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது.

1

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

சிகரம் தொடு படத்திற்கு பின் மீண்டும் இசையமைப்பாளர் டி.இமான் கௌரவ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றுகிறார். டிமான்டி காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த்சிங் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று இனிதே நடைபெற்றது.2

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

எழுத்து இயக்கம் – கௌரவ் நாராயணன்

தயாரிப்பு – லைகா புரொடக்ஷன்ஸ்

இசை – டி.இமான்

ஒளிப்பதிவு – அரவிந்த்சிங்

கலை – விதேஷ்

படத்தொகுப்பு – KL. பிரவீன்

சண்டைப்பயிற்சி – திலிப் சுப்பராயன்

மக்கள் தொடர்பு – நிகில்

தயாரிப்பு நிர்வாகம் – வெங்கட்.K

நிர்வாக தயாரிப்பு – S.பிரேம்

 

Telugu rights of Kavalai Vendam is bagged by SUPER GOOD FILMS

It is a must to say that Love, Friendship, Humour sense and living the life without Jealousy are the most powerful qualities for being happy. Bounded and tied up with those divine natures, the upcoming film ‘Kavalai Vendam’, Produced by Elred Kumar of RS Infotainment is all set to double the happiness in Pooja Holidays. ‘Kavalai Vendam’, directed by Deekay of ‘Yaamiruka Bayame’ fame that has Jiiva and Kajal Agarwal in the lead roles is currently creating noise in the commercial sectors. the distribution Telugu rights of this film has been captured by
RB Choudary of ‘Super Good Films’ and Thirupathi Prasad ( Producer of the Mahesh Babu -Murugadas project) a popular name in the Telugu trade circles. The arrival of such big Production & distribution houses is elevating the already soaring commercial status of “Kavalai Vendam”.
“We are very much happy and proud that Super Good Films the renowned Production and distribution house has bought our Telugu rights. I am pretty sure that our Kavalai Vendam will be a commercial entertainer that will win accolades beyond the linguistic borders” says Elred Kumar, the Producer of ‘Kavalai Vendam’ in a confident tone.

Telugu rights of Kavalai Vendam is bagged by SUPER GOOD FILMS

‘கவலை வேண்டாம்’ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி இருக்கிறது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ 
காதல், நட்பு, நகைச்சுவை உணர்வு, பொறாமையின்மை ஆகிய சிறந்த குணங்கள் தான் ஒரு மனிதனை கவலை இல்லாமல் வாழ செய்கிறது… வருகின்ற தசரா விடுமுறை நாட்களில் ரசிகர்களின் மகிழ்ச்சியை  இந்த குணங்களோடு இரட்டிப்பாக்க தயாராக இருக்கிறது, ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து இருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம்.
‘யாமிருக்க பயமே’ படப்புகழ் டீகே இயக்கி,  ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும் இந்த ‘கவலை வேண்டாம்’  திரைப்படமானது, வர்த்தக மற்றும் வணீக உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தி கொண்டே போகும் இந்த   ‘கவலை வேண்டாம்’ படத்தின் தெலுங்கு உரிமையை தற்போது  ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஆர்.பி சவுத்திரி மற்றும் திருப்பதி பிரசாத் (மகேஷ் பாபு – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் தயாரிப்பாளர்) வாங்கி இருப்பது, திரையுலகினரின் கவனத்தை பெருமளவில் ஈர்த்து இருக்கிறது.
“சிறந்த தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திகழ்ந்து  வரும்  சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் எங்களின் ‘கவலை வேண்டாம்’ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியிருப்பது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும்  இருக்கின்றது… சிறந்த வணீகத்திற்கும், வர்த்தகத்திற்கும்  ஏற்ற திரைப்படமாக மட்டுமில்லாமல், மொழிகளை தாண்டி அனைத்து தரப்பு  ரசிகர்களின் மனதை வெல்லும் ஒரு திரைப்படமாகவும் எங்களின் ‘கவலை வேண்டாம்’ இருக்கும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்…” என்று கூறுகிறார்  ‘கவலை வேண்டாம்’ படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.