#22YearsOfSelfMadePhenomAJITH

1993-யில் ஆரம்பம் ஆனது உன் சினிமா பயணம். நீ வருவாய் என காத்திருந்த புது இயக்குனர்களுக்கு நீ ஆனந்த பூங்காற்றாய் வாய்புகள் வீசினாய், அவர்களுக்கு முகவரி என்ற ஒன்றை தந்தாய்.

அமராவதியில் தொடங்கிய உன் தமிழ் பயணம், இங்குள்ள ரெட்டை ஜடை வயசுள்ள எல்லா வான்மதிகளுக்கும் ஆசை நாயகனாக மாற்றியது, பின், அவர்களின் காதல் கோட்டையின் ரெட் அர்டினின் அம்பை விட்ட மன்மத ராஜா வாக உல்லாசமாய் உலவசெயதது. இதனால் எல்லா கல்லூரி வாசலிலும், பெண்களின் காதல் மன்னன் நீ தான் என்றானது. இது  அன்றும் இன்றும் என்றும் நிலையை நிற்கிறது.

இதற்கு இன்னொரு உதாரணம், இன்று வரை எல்லா பெண்களும் தனது மைனர் மாப்பிள்ளை அஜித் போல இருக்க வேண்டும் என்ற கண்டிப்பை  பெற்றோரிடம் வைக்கும் பொழுது தெளிகிறது.
இப்படி சாம்ற்றாட் அசோகனை போல எல்லா இதயங்களையும் பவித்திரமாய் ஆட்கொண்டாய் அஜித் அவர்களே ..

இந்த பயணத்தில், வணிகரீதியாக, உன்னை தேடி வந்த அத்தனை தயாரிப்பாளருக்கும் நீ திருப்தி ஆழ்வார் போல் பணம் மழை பெய்தாய். உன்னை நாடிய அனைவரும் , ராஜாவின் பார்வையை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று ஊரெல்லாம் புகழ்ந்தனர்… மகிழ்ந்தனர் … எனில் உன் ராசி அப்படி.. யோகா ரசி …

தமிழ் திரை உலகின் உச்ச நாயகன் என்ற கிரீடம் உன்னை அடைந்ததில் பெருமை கொள்கிறது .. அதுவே நிறந்திரமானது உன் தலையில்

இவ்வாறு, அட்டகாசமாய் ஜொலித்தது “அஜித்” என்ற ஓர் மந்திர சொல் பூவி எங்கும்..

அதை இன்னும் அமர்க்களம் படுத்த,
அவள் வருவாள என்ற ஒலித்த உங்கள் நேசத்துக்கு,  “பேபி ஷாலினி”, அவர்கள் மனைவியாய், உன்னை கொடு என்னை தருவேன் என்றார்..
இதற்கு ஏற்றார் போல் இரு மணகளுமே  உன்னிடத்தில் என்னை கொடுதேன்  என்ற ஒரே காதல் எண்ணத்தோடு உயிரோடு உயிராக கலந்தது அன்று (24.04.2000) மணமேடையில்.

நீங்கள், இன்று வாழும் எல்லா தம்பதியனர்களுக்கும்  ஓர் சிறந்த உதாரணம். காரணம், என் வீடு என் கணவர் என்று இருக்கும் சராசரி குடும்ப பெண் போல் இல்லாமல், (ஷாலினி) அவர்களின் திறமைக்கு மதிப்பு கொடுத்து, பாட்மிட்டன் விளையாட்டில் அவர்களை ஊக்குவித்த குரு ஜி நீ மற்றும் ஆசன ஏகன் நீ என்பதில் ஐயம் இல்லை …

பொது வாழ்விழும், நீ ஒரு சிறந்த ரோல் மாடல்.
ஏர்போர்ட், கல்வி கற்கும் பள்ளியில் , வாக்கு பதியும் வளாகத்தில் நீர் வருசையில் நின்று ஒரு சாதாரண குடிமகன் போல நடந்து கொண்டாய். இது நட்சத்திர இடத்தில இருந்தும், ஒரு நல்ல சிடிசன் என்பதை உணர்த்தும், ஓர் சிறந்த உதாரணம். உன் ரசிகர்களும் இந்த வழி முறையை பின்பற்றுவர்.

கொடையில், நீ அள்ளித்தரும் தரும், ஒரு அட்சய வாலி ..  இதை நீ மறைத்தாலும் , உன் பாசமலர் கொண்ட மீடியாக்கள், பூவெல்லாம்   உன் வாசம் வீசும்மாறு செய்துவிடுகிறார்கள் .. அசல் நாயகனே …உன்  கொடை வாழ்க.. உன் வெற்றி நடை தொடர்க ..

மேதையாக இருந்தும், மேடை ஏற நீ முறுபாய்.. அப்படி வந்தால், பரமசிவனை போல் உன் நெற்றி கண்ணை திறந்து உண்மையாய் உரைப்பாய்.
ஆஞ்செனெயனை போல்,   இந்த தமிழ் நாடு கண்டெடுத்த வீரதிருமகன் நீ !!

இந்த தீனா-வை வீழ்த்த எந்த பகைவனும் இன்னும் பிறக்க வில்லை,
இந்த பில்லாவை ஜெய்க்க  எந்த வில்லனும் இன்னும் முலைக்கவும்  இல்லை.

நீ ஒரு “வாழும் வரலாறு” …

ஜனனம் மரணம் – உன் ரசிகர்கள் என்றும் உன்னிடம்..

—-

ஒரு ரசிகன்…

twitter id

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s